Enter your Email Address to subscribe to our newsletters

இமாச்சல பிரதேசம் , 03 மே (ஹி.ச.)
இமாச்சல பிரதேச குல்லு மாவட்டத்தில் நேற்று அன்னி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனத்தில் 7 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த வாகனத்தின் மீது திடீரென மரம் விழுந்ததில் விபத்து நேரிட்டது.
சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த,சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
மேலும், மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் சுகு உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b