Enter your Email Address to subscribe to our newsletters

சத்தீஸ்கர், 03 மே (ஹி.ச.)
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் நேற்று நான்கு காவலர்கள் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
இந்த வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த நான்கு காவலர்களில் மூவருக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
துயரத்தில் மூழ்கிய குடும்பத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வீரர்களின் தியாகத்தை உணர்த்தும் கனத்த மவுனத்துடன் அமைந்தது.
மறைந்த காவல் ஆய்வாளர் சுக்ராம் வட்டி, காவலர்கள் கிருஷ்ணா கோம்ரா மற்றும் சஞ்சய் கட்பாலே ஆகியோரை நினைவுகூரும் வகையில், நாராயண்பூர் மாவட்ட காவலர் அணிவகுப்பு மைதானத்தில் மலர் வளையங்களுடன் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்வில் பங்கெடுத்த பஸ்தார் சரக காவல்துறைத் தலைவர் சுந்தர்ராஜ் பட்டிலிங்கம் கூறுகையில், கடமையாற்றும் போது காவலர்கள் வெளிப்படுத்திய துணிச்சலைப் பாராட்டினார்.
இம்மாநிலம் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகு, நக்சலைட்டுகளுடன் தொடர்புடைய முதல் குண்டுவெடிப்பு இதுவென அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் இந்த சோக நிகழ்வு, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடரும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b