Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 03 மே (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள், திருச்செங்கோடு எலையம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு, திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலை முன்பாக தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, சங்ககிரி சாலை புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் போது பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும் என்பதையும், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாக காவல் ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
இந்த அணிவகுப்பானது, திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது.
Hindusthan Samachar / P YUVARAJ