தமிழக அமைச்சர்களுக்கு அரசு குடியிருப்புகள் ஒதுக்கீடு - பொதுப்பணித் துறை அரசாணை வெளியீடு
சென்னை, 30 மே (ஹி.ச.) தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கான அரசு இல்லங்களை ஒதுக்கீடு செய்து தமிழக பொதுப்பணித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னையின் முக்கிய குடி
தமிழக அமைச்சர்களுக்கு அரசு குடியிருப்புகள் ஒதுக்கீடு: பொதுப்பணித் துறை அரசாணை வெளியீடு


சென்னை, 30 மே (ஹி.ச.)

தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கான அரசு இல்லங்களை ஒதுக்கீடு செய்து தமிழக பொதுப்பணித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி,

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னையின் முக்கிய குடியிருப்புப் பகுதியான பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள அரசு இல்லங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநில அமைச்சர்களின் அலுவல் பணிகள் மற்றும் பாதுகாப்பு கருதி, அரசு நிர்வாக மரபுப்படி இந்த இல்லங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

பசுமை வழிச் சாலை, அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் வசிக்கும் உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியாக கருதப்படுகிறது.

தலைமைச் செயலகம், சட்டப்பேரவை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு அருகாமையில் இப்பகுதி அமைந்திருப்பதால், நிர்வாக வசதிக்காகவே இங்கு இல்லங்கள் ஒதுக்கப்படுகின்றன.

புதிய அமைச்சர்களின் பொறுப்பேற்பைத் தொடர்ந்து இந்த ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒதுக்கீடு செய்யப்பட்ட இல்லங்களில் தேவையான பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிப் பணிகளை மேற்கொள்ளவும் துறை ரீதியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

தமிழக அமைச்சர்களின் துறை வாரியாக குடியிருப்பு எண்கள் மற்றும் பங்களா பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சுகாதாரம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, வீட்டுவசதி, கூட்டுறவு, சமூக நலன், சுற்றுலா, வருவாய் உள்ளிட்ட பல துறைகளின் அமைச்சர்களுக்கு தலைமைச் செயலகம் அருகிலுள்ள அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்க்கு முல்லை பங்களா (NB No.27) ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்வளத் துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்களுக்கு தாமிரபரணி பங்களா (NB No.15) வழங்கப்பட்டுள்ளது.

கால்நடைத் துறை அமைச்சர் எஸ். கமல் அவர்களுக்கு NCB No.16 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பி. ராஜ்குமார் அவர்களுக்கு பாமணி பங்களா (PB No.3) வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ் அவர்களுக்கு சிருவாணி பங்களா (NB No.12A) ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் ஜெகதீஷ்வர் அவர்களுக்கு NCB No.19, சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் அவர்களுக்கு NB No.37 ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி அவர்களுக்கு NB No.17 வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் வி. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களுக்கு NB No.11 (ரோஜா பங்களா) ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சி. ரமேஷ் அவர்களுக்கு NB No.15 வழங்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் அவர்களுக்கு NB No.12 (அன்பு பங்களா) ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் டாக்டர் குமார் அவர்களுக்கு “அன்பு” பங்களா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. தென்னரசு அவர்களுக்கு பொதிகை பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் அவர்களுக்கு NCB No.18 வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வாஸ் அவர்களுக்கு NB No.24 (மனோரஞ்சிதம்), நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் என். மாரி வில்சன் அவர்களுக்கு NCB No.7A ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு மற்றும் கலால் துறை அமைச்சர் கே. விக்னேஷ் அவர்களுக்கு PB No.1, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் அவர்களுக்கு NCB No.1 வழங்கப்பட்டுள்ளது.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு NB No.6 (சமந்தி பங்களா) ஒதுக்கப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி அவர்களுக்கு NB No.7, வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களுக்கு NB No.36 வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் அவர்களுக்கு PB No.2 ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களாக்கள் அனைத்தும் அமைச்சர்கள் தங்கள் பதவிக்காலத்தில் வாடகையில்லாமல் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் வீட்டு வாடகை உதவித்தொகை (HRA) பெற தகுதி இல்லை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b