கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 30 மே (ஹி.ச.) கோவா 1961-இல் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. பின்னர் 1987 மே 30 அன்று முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு, இந்திய ஒன்றியத்தின் 25-வது மாநிலமாக உருவானது. கோவா மாநில தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர ம
கோவா மாநில தினத்தை முன்னிட்டு  பிரதமர் மோடி  வாழ்த்து


புதுடெல்லி, 30 மே (ஹி.ச.)

கோவா 1961-இல் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.

பின்னர் 1987 மே 30 அன்று முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு, இந்திய ஒன்றியத்தின் 25-வது மாநிலமாக உருவானது.

கோவா மாநில தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் வலைத்தள கணக்கில் அவர் வெளியிட்ட செய்தியில்,

கோவாவின் செழுமையான கலாச்சாரம், தேவாலயங்களின் கம்பீரம், இயற்கையின் எழில்மிகு அழகு மற்றும் அன்புமிக்க மக்கள் ஆகியோர் உலகெங்கும் நன்கு அறியப்பட்டவை.

கோவாவின் வளர்ச்சிக்காகவும், அதன் தனித்துவமான அடையாளத்தைப் பேணிக்காப்பதற்காகவும் அயராது உழைத்த தனிநபர்களின் இடைவிடாத முயற்சிகளை நாம் நினைவுகூர்ந்து போற்ற வேண்டும்.

ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்; கோவா மாநிலம் அனைத்து வளங்களுடனும் செழித்தோங்கட்டும்.

இதுவே இந்நாளில் எங்களின் நல்விருப்பமாகும். ஒவ்வொரு கோவா வாழ் மக்களுடைய நல்வாழ்வுக்கும், செழிப்புக்கும், அத்துடன் மாநிலத்தின் தொடர் வளர்ச்சிக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b