நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீர் தீ விபத்து
சம்பல்பூர், 30 மே (ஹி.ச) ஒடிசா மாநிலம் சம்பல்பூர் கோட்டத்திற்குட்பட்ட கேசிங்கா நகர் வழியாக நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அவசரகால நடவடிக்கைகளைத் தொடங்கியத
நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீர்  தீ விபத்து


சம்பல்பூர், 30 மே (ஹி.ச)

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் கோட்டத்திற்குட்பட்ட கேசிங்கா நகர் வழியாக நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது.

தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அவசரகால நடவடிக்கைகளைத் தொடங்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அந்தச் சரக்கு ரயில் இரவு 8.15 மணியளவில் தித்லாகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, தீயணைப்புப் பணிகள் துரிதமாகத் தொடங்கப்பட்டன.

தகவல் கிடைத்த 10 நிமிடங்களில், அதாவது இரவு 8.25 மணிக்கு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், சரக்கு ரயிலின் ஐந்து வேகன்கள் தீயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை மூத்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறை மற்றும் தீயணைப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையால் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

தீயால் பாதிக்கப்பட்ட வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலை மீண்டும் இயக்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தத் தீ விபத்தால் பயணிகள் ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், அனைத்து சேவைகளும் வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியில் தானாக ஏற்படும் வெப்பம் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b