Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 30 மே (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான ஜெய் என்ற ஜெய் கிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பொக்லைன் இயந்திரத்தை இயக்கி வரும் தொழிலாளி அழகுதுரை என்பவரை அவர் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கட்சித் தலைமையின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாம்பரம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடம் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கொள்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருங்களத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b