Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் கொண்டு வந்த பால், விசாக கொரடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சண்முகர் சிலைக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பாலை கோவில் நிர்வாகம் முறையாக சேகரிக்காமல் சாக்கடை நீரில் கலந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விரதமிருந்து பக்தியுடன் கொண்டு வரப்பட்ட அபிஷேக பால் வீணாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியும் மனவேதனையும் ஏற்பட்டுள்ளது.
அபிஷேக பாலை முறையாக சேகரித்து பக்தர்களுக்கு வழங்காமல் சாக்கடையில் கலக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ