Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 31 மே (ஹி.ச.)
ஹைதராபாத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை துறையில் புதிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இரத்த மாதிரியை மட்டுமே பயன்படுத்தி புற்றுநோயை கண்டறியும் நவீன
“லிக்விட் பயாப்சி” சேவையை விரைவில் தொடங்க உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை தரப்பில் தனது அறிக்கையில் கூறியதாவது :
பொதுவாக புற்றுநோய் கண்டறிய கட்டியிலிருந்து திசு எடுத்து பரிசோதனை
(டிஷ்யூ பயாப்சி) செய்யப்படும் நிலையில், புதிய லிக்விட் பயாப்சி முறையில் ஒரு இரத்த மாதிரி மட்டுமே போதுமானதாகும்.
இதன் மூலம் உடலில் புற்றுநோய் செல்களின் டி.என்.ஏவை ஆய்வு செய்து, நோயின் நிலை மற்றும் தீவிரத்தன்மையை துல்லியமாக அறிய முடியும்.
இதனால் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை போன்ற உடல் சிரமங்கள் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் ஜீனோமிக்ஸ் மையத்தில்
‘நெக்ஸ்ட் ஜெனரேஷன் சீக்வென்சிங்’ தொழில்நுட்பம் மூலம் இதுவரை 1,443 நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனைகள் மூலம் புற்றுநோய்க்கு காரணமான மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப தனிப்பட்ட “டார்கெட்டட் தெரபி” வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உயர் செலவுடைய பரிசோதனைகள் அனைத்தும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மற்றும் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA