திருச்செங்கோடு தேர்த்திருவிழாவில் விபத்தில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
நாமக்கல், 31 மே (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின் போது, இன்று காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெற்றது. தேரோட்டத்தின் போது, திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் (18),
விஜய்


நாமக்கல், 31 மே (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின் போது,

இன்று காலை சுமார் 10.30 மணியளவில் நடைபெற்றது.

தேரோட்டத்தின் போது, திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் (18), தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவருக்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டு பலத்த காயமடைந்தார்.

உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் தெரிவித்துள்ள முதலமைச்சர்,

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகன் (19) என்பவருக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர்,

அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam