தர்மடத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பின்னடைவு
திருவனந்தபுரம், 04 மே (ஹி.ச..) 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ.க. கூட்டண
K


திருவனந்தபுரம், 04 மே (ஹி.ச..)

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

ஆட்சியை அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ.க. கூட்டணி இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இதுவரை வெளியான நிலவரப்படி, 140 தொகுதிகளில் 87 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி பல முக்கிய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியிட்ட தர்மடம் சட்டசபை தொகுதியிலும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பினராயி விஜயன் 2 ஆயிரத்து 812 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் முன்னிலையில் உள்ளார்.

இதனால் கேரள அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் இறுதி முடிவுகளை அரசியல் கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA