மேற்கு வங்காளத்தில் மம்தாவுக்கு அதிர்ச்சி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றும் நிலையில் பா.ஜ.க. கூட்டணி
கொல்கத்தா, 04 மே (ஹி.ச.) மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்
K


கொல்கத்தா, 04 மே (ஹி.ச.)

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு முன்பாக வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகள் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக இருந்ததால், தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

ஆரம்பம் முதலே பா.ஜ.க. கூட்டணி பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியிலும் அவர் பின்னடைவை சந்தித்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுவெந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.

மேலும் நந்திகிராம் தொகுதியிலும் சுவெந்து அதிகாரி முன்னிலை பெற்றுள்ளார்.

காலை 11 மணி நிலவரப்படி,

பெரும்பான்மைக்கு தேவையான 148 இடங்களை தாண்டி, 186 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

குறிப்பாக தொழில்துறை பகுதிகளில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 105 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இடதுசாரி கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன.

அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதையே தற்போதைய தேர்தல் முன்னிலை நிலவரங்கள் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA