Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 04 மே (ஹி.ச)
புதுச்சேரியில் மொத்தம் 9,50,311 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 446,361 ஆண்கள், 503,810 பெண்கள் மற்றும் 140 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர்.
ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சாதனை அளவாக 91 வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வரலாற்றில் முதல் முறையாக 23 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தலைவர் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனத்தலைவர் ரங்கசாமிக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்பி வைத்திலிங்கத்துக்கும் இடையே போட்டி நிலவியது.
ஆனால் தொடக்கம் முதலே ரங்கசாமி முன்னிலை பெற்றிருந்தார்.
இறுதியில் ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வென்றார். தவெக கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகத்தின் விநாயகம் 5,583 வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் சேதுசெல்வம் 3,884 வாக்குகளுடன் 3 இடத்தில் உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் 2,990 வாக்குகளுடன் 4-ம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி கார்த்திக் குமாரி 534 வாக்குகள் பெற்றார். நோட்டா 196 வாக்குகள் எடுத்திருந்தது.
புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து இம்முறை என்டிஏ கூட்டணியில் இரு தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டன.
முதல் சுற்றில் எண்ணப்பட்ட 17 தொகுதிகளில் முதலாவதாக உப்பளம் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் 9008 வாக்குகளும், தவெக சிவா - 7826, திமுக அனிபால் கென்னடி 5,320 வாக்குகள் பெற்றனர்.
இதையடுத்து 1182 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது.
Hindusthan Samachar / vidya.b