தமிழ்கத்தில் தற்போதைய நிலவரப்படி த.வெ.க 112 தொகுதிகளில் முன்னிலை
சென்னை, 04 மே (ஹி.ச) தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. சிறிது இடைவேளை அடுத்து தவெக முன்னிலையில் பெற்றது
TVK is leading in 112 constituencies


சென்னை, 04 மே (ஹி.ச)

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. சிறிது இடைவேளை அடுத்து தவெக முன்னிலையில் பெற்றது.

அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருந்து வருகிறது. குறிப்பாக திமுகவின் கோட்டையாக இருந்த வந்த தலைநகர் சென்னையை இந்த சட்டசபை தேர்தலில் தவெக தன்வசப்படுத்தி உள்ளது.

12 மணி நிலவரப்படி,

தவெக 112 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 70 தொகுதிகளிலும் திமுக கூட்டணியிலும் 52 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 31 அமைச்சர்களும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் உற்சாகமடைந்த கட்சித் தொண்டர்கள் விஜய்யின் 'விசில் போடு' பாடலை பாடியும், கட்சியின் சின்னத்தை உயர்த்திப் பிடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / vidya.b