Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதியில் 261 வாக்கு சாவடி கள் 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
மொத்த வாக்காளர்கள் 2,14,785 ஆண்கள் 1,05,300, பெண்கள் 1,09,473 இரண்டாம் பாலினத்தவர்கள் 12 உள்ளனர்.
இதன் வாக்குஎண்ணிக் கை நேற்று காலை 8 மணிக்கு மதுரை
அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நடைபெற்றது.
இதில் 19 சுற்று களாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் எம்.வி. கருப்பையா
63, 907 வாக்குகளும்,தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் 61,229 வாக்குகளும்,அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் 49,494 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலட்சுமி 10,430 வாக்குகளும்,அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் பாலமுருகன் 2091 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் எம். வீ.
கருப்பையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனை விட 2678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
இந்த வெற்றி மண்ணின் மைந்தனு க்கு கிடைத்த வெற்றி! எங்கள் தளபதி விஜய்யின் புரட்சிக்குகிடைத்த வெற்றி என்று த.வெ.க வினர் கூறினர்.
Hindusthan Samachar / Durai.J