காரைக்குடி தொகுதியில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட சீமான் டெபாசிட் இழந்தார்
காரைக்குடி, 04 மே (ஹி.ச.) காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மருத்துவர் பிரபு 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர
lost his deposit.


காரைக்குடி, 04 மே (ஹி.ச.)

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மருத்துவர் பிரபு 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 48,125 வாக்குகளையும், அதிமுக கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்ட அமமுக வேட்பாளர் 29,412 வாக்குகளை பெற்றுள்ளனர்.

நாம் தமிழர் சீமான் - 27,214 பெற்று தோல்வியடைந்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படும் காரைக்குடி தொகுதி தமிழக வெற்றிக்கழகம் வசமாகியுள்ளது.

10 ஆண்டுகால நாதக-வின் அரசியல் போராட்டம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், சீமானின் தீவிரத் தமிழ் தேசியக் கொள்கை மற்றும் பிற மாநிலத்தவர் குறித்த கடுமையான விமர்சனங்கள், ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்காளர்களை பாதித்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b