கேரளாவில் பெரும்பான்மையை கடந்தது ஐக்கிய ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலை
கேரளா, 04 மே (ஹி.ச) மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 823 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளுடன் தொடங்கிய எண்ணிக்கை, காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்ப
கேரளாவில் பெரும்பான்மையை கடந்தது ஐக்கிய ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலை


கேரளா, 04 மே (ஹி.ச)

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 823 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தபால் வாக்குகளுடன் தொடங்கிய எண்ணிக்கை, காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தொடர்கிறது.

ECINET தளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதுப்பிப்புகள் வெளியிடப்படுகின்றன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள சட்டப்பேரவையில் மொத்தம் 140 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை.

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 97 இடங்களில் முன்னிலையுடன் பெரும்பான்மையைக் கடந்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி (LDF) 39 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் நடந்து வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெபி மாதர் கூறுகையில்,

இந்த முடிவு CPI(M) தலைமையிலான LDF அரசின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான அலை வலுவாக வீசியுள்ளது.

நாங்கள் 89 இடங்களைக் கடந்துவிட்டோம், 100-க்கு இன்னும் 11 இடங்கள்தான்.

இது கருத்துக்கணிப்புகள் கணித்ததை விட அதிகம். கேரள மக்கள் காங்கிரஸ் தலைமையிலான UDF-க்கு தீர்க்கமான வெற்றியை பரிசாக அளித்துள்ளனர்.

இது உற்சாகம், பெருமிதம் நிறைந்த தருணம். கேரள மக்களுக்கு நன்றி கூறுகிறோம். CPI(M) தலைமையிலான LDF அரசு முற்றிலும் தோல்வியடைந்ததையும், ஆட்சிக்கு எதிரான மனநிலை தெளிவாக செயல்பட்டதையும் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b