Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மே (ஹி.ச.)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டதை நிறுத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வழக்கறிஞர் ரவி ராஜா தாக்கல் செய்த மனுவில், வழக்கறிஞர் சட்டத்தின்படி கொலை, கொள்ளை போன்ற கடுமையான குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களை வழக்கறிஞராக பதிவு செய்யக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேரறிவாளனை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யவில்லை.
மாறாக தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதால், வழக்கறிஞர் சட்டத்தின் கீழ் வழக்கறிஞராக பதிவு செய்யும் தகுதியை இழக்கிறார் என்றும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ