ஆன்மிக பயணம் செல்லும் புதுவை முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி, 06 மே (ஹி.ச.) புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி 2001 முதல் 2008 ஆண்டு வரையிலும், பின்னர் 2011 முதல் 2016 வரையிலும் அவர் முதல்வராக இருந்திருக்கிறார். 2011ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து, தனியாக அகில இந்திய என்.ஆர். காங்கிர
ஆன்மிக பயணம் செல்லும் புதுவை முதல்வர் ரங்கசாமி


புதுச்சேரி, 06 மே (ஹி.ச.)

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி 2001 முதல் 2008 ஆண்டு வரையிலும், பின்னர் 2011 முதல் 2016 வரையிலும் அவர் முதல்வராக இருந்திருக்கிறார்.

2011ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து, தனியாக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை அவர் உருவாக்கினார். அதன் பின்னர், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

தற்போதைய 2026 புதுவை சட்டமன்ற தேர்தலிலும் அந்தக் கூட்டணி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி 5-வது முறையாக முதல்வராகிறார்.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் புதுச்சேரி வந்து நேரம் கேட்டுள்ள நிலையில் இன்று காலை முதல்வர் ரங்கசாமி ஆன்மிக பயணம் புறப்பட்டார்.

அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளும் புறப்பட்டனர்.

இது குறித்து என்ஆர் காங்கிரஸ் தரப்பில் கூறுகையில்,

சேலம் அப்பா பைத்திய சாமி ஜீவசமாதி சென்று வணங்குகிறார்.

அங்குள்ள அப்பா பைத்தியம் சாமிக்கு பிடித்தமான மேரி பிஸ்கெட், ஜாங்கிரி ஆகியவற்றை படைத்து வழிபடுவார். அங்கு பதவியேற்பு நாள், நேரம் கணிக்கிறார். அமைச்சர்களையும் முடிவு செய்யும் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

தொடர்ந்து பொள்ளாச்சி வேட்டைக்காரபுத்தூர் சென்று அழுக்கு சித்தரையும் வழிபடுகிறார்.

இதன்பிறகு புதுச்சேரி திரும்புகிறார். அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் செல்லவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b