திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய முடிவுகள் – ரூ.44.20 கோடிக்கு பட்டுத் துணி கொள்முதல், அலிபிரியில் நிரந்தர சோதனைச் சாவடி
சென்னை, 06 மே (ஹி.ச) தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஆப்கோ நிறுவனங்களிடமிருந்து ரூ.44.20 கோடி மதிப்பில் பட்டுத் துணிகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த துணிகள் பெரும்பாலும் கோயிலின் தேவைகளுக்கும், பக்
Tiruppathi


சென்னை, 06 மே (ஹி.ச)

தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஆப்கோ நிறுவனங்களிடமிருந்து ரூ.44.20 கோடி மதிப்பில் பட்டுத் துணிகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த துணிகள் பெரும்பாலும் கோயிலின் தேவைகளுக்கும், பக்தர்களுக்கு வழங்கப்படும் புனிதப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்.

அதே கூட்டத்தில், திருப்பதியின் அலிபிரி சோதனைச் சாவடி பகுதியில் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது.

விநாயகர் கோயில் அருகே பேருந்துகளுக்கான சோதனைகளை சீரமைக்க ரூ.4.25 கோடி செலவில் நிரந்தர சோதனைச் சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், பக்தர்களின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ