களஆய்வுக்கு வராத படகுகள் ரத்து - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை
தூத்துக்குடி, 06 மே (ஹி. ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளுக்கு வருடாந்திர களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். அவர் வ
Tuti


தூத்துக்குடி, 06 மே (ஹி. ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளுக்கு வருடாந்திர களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்நாடு கடல் சார் மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் சட்டம்ன் கீழ், ஆண்டுதோறும் அனைத்து மீன்பிடி படகுகளும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளால் நேரடி களஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டிற்கான மீன்பிடித்தடைக்காலத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கான களஆய்வு 26.05.2026 அன்று நடைபெற உள்ளது.

நாட்டுப்படகுகளுக்கான களஆய்வு 05.06.2026 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

களஆய்வில் ஆஜராகாத படகுகளுக்கு அரசின் விற்பனை வரி விலக்குடன் வழங்கப்படும் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், அவை பயன்பாட்டில் இல்லாததாக கருதி பதிவு சான்றிதழ் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, களஆய்வு நடைபெறும் நாளன்று காலை 6.00 மணிக்கே அனைத்து மீன்பிடி படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ