Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 06 மே (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்று முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். கணிசமான வெற்றியைப் பெற்றதையடுத்து, கேரளாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.
முதல்வர் வேட்பாளர் குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை அறிய, காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மாக்கன் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கேரள முதல்வரை ஜனநாயக முறையில் தேர்வு செய்வதில் தனது கட்சி உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜெபி மாதர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜ.க.) விமர்சித்ததுடன், ராஜஸ்தானில் நடந்ததைப் போல ‘சீட்டு முறை’யில் முதல்வரைத் தேர்வு செய்யும் அணுகுமுறையை காங்கிரஸ் கடைப்பிடிக்காது
கட்சித் தலைமை கேரளாவுக்கு பார்வையாளர்களை நியமிக்கும். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) அனைவரிடமும் கலந்தாலோசித்த பிறகே முதல்வர் பெயர் அறிவிக்கப்படும்.
நாங்கள் அபார வெற்றி பெற்றுள்ளோம். தற்போது வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் உள்ளனர்.
நடைமுறைப்படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பார்வையாளர்களை முடிவு செய்யும். அவர்கள் கேரளா வருவார்கள். அனைத்து எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கூட்டப்பட்டு, அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்.
காங்கிரஸ் மிகவும் ஜனநாயகமான கட்சி. ராஜஸ்தானில் பெயர் எழுதிய சீட்டைக் கொடுத்து முதல்வரை அறிவித்ததைப் போல இங்கு இருக்காது. அதன் பிறகு கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.
என்று மாதர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b