Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 மே (ஹி.ச.)
தமிழக அரசியல் சூழலில் ஆட்சி அமைப்பிற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க. நிர்வாகி அருண்ராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.
அப்போது, நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்வோம். திமுகவை விட்டுவிட்டு வரமாட்டோம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி தலைவர் காதர் மொகிதீன் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதையே பின்பற்றுவோம்.
த.வெ.க.வுக்கு ஆதரவு தர முடியாது என்றும் அருண்ராஜிடம் நேருக்கு நேர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், த.வெ.க. மேற்கொண்டு வரும் கூட்டணி மற்றும் ஆதரவு திரட்டும் முயற்சிக்கு தரப்பில் முதல்இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி வெளிப்படையான மறுப்பு கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam