Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 மே (ஹி ச.)
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து இன்னும் புதிய அரசு பொறுப்பேற்காத நிலையில், பி.எம். ஶ்ரீத ட்டத்தை ஏற்கச் சொல்லி ஒன்றிய அரசு நெருக்கடி கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பி.எம். சிறீ திட்டத்தின் மூலம் மும்மொழிக் கொள்கையையும், இந்தித் திணிப்பையும் தமிழ்நாட்டில் அமல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
தமிழ்நாட்டின் கல்வி உரிமை மற்றும் மொழி அடையாளத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை, பி.எம். சிறீ திட்டத்தை ஏற்றால் மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் கூறிய போது,
தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக மறுத்து, ‘10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்’ என தெரிவித்தார் என்றும் நினைவுகூர்ந்தார்.
தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.
யாரால் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் முக்கியம். பா.ஜ.க. ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை நேரடியாக ஆள முடியாது என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தித் திணிப்பை ஏற்கமாட்டார்கள் என்றும், மொழி மற்றும் கல்வி உரிமைகளில் தலையீடு செய்ய முயன்றால் தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ