ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நிறைவு தினம் - இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி, 07 மே (ஹி.ச.) பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சல், துல்லியம் மற்றும் தொழில்முறை திறனை வெக
Modi Praises the Valor of the Indian Armed Forces


புதுடெல்லி, 07 மே (ஹி.ச.)

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சல், துல்லியம் மற்றும் தொழில்முறை திறனை வெகுவாகப் பாராட்டினார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

ஒரு வருடத்திற்கு முன்பு, ஆபரேஷன் சிந்தூரின் போது நமது ஆயுதப்படைகள் இணையற்ற துணிச்சல், துல்லியம் மற்றும் உறுதியை வெளிப்படுத்தின. பஹல்காமில் அப்பாவி இந்தியர்களைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நமது படைகளின் வீரத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் தலைவணங்குகிறது.

ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியையும், தேசிய பாதுகாப்பைக் காப்பதில் உள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் பிரதிபலித்தது.

ஆயுதப்படைகளின் தொழில்முறைத் திறன், தயார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த பலத்தை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியது. முப்படைகளுக்கு இடையேயான கூட்டு செயல்பாடு வளர்ந்து வருவதை இது நிரூபித்தது.

ஒரு வருடம் கழித்து, இன்றும் பயங்கரவாதத்தை வீழ்த்துவதிலும், அதற்கு உதவும் சூழலை அழிப்பதிலும் நாம் முன்பு போலவே உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தள காட்சிப் படத்தையும் ஆபரேஷன் சிந்தூரைக் குறிக்கும் வகையில் மாற்றியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b