ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நினைவு தினம் – ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பூஞ்ச், 07 மே (ஹி.ச.) 2025 மே 7ஆம் தேதி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
Operation Sindoor: First Anniversary


பூஞ்ச், 07 மே (ஹி.ச.)

2025 மே 7ஆம் தேதி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.

அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி,

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய 9 முக்கிய பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் அழித்தன. இந்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலாக பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களையும், எல்லைப் பகுதிகளில் ஷெல் வீச்சையும் மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் ராணுவ மோதல் நீடித்தது.

பதிலடியாக இந்தியா, லாகூரில் உள்ள ரேடார் நிலையங்கள் மற்றும் குஜ்ரன்வாலா அருகே இருந்த கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

இறுதியாக, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் இந்திய DGMO-வை தொடர்பு கொண்டதை அடுத்து, 2025 மே 10ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் முடிவுக்கு வந்தது.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனால் ஜம்மு காஷ்மீரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய எல்லை பகுதியான பூஞ்ச் மாவட்டத்தின் முக்கிய சந்தைப் பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முக்கிய இடங்களில் கூடுதல் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலின்போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

இந்த நடவடிக்கை இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கும், ராணுவத் தயார்நிலைக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / vidya.b