Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 07 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சேமிப்புக் கிடங்கினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆட்சியர் சேமிப்புக் கிடங்கில் மதுபானப் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறை, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகள், கிடங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள், தீயணைப்பு கருவிகளின் நிலை மற்றும் மின்சார இணைப்புகள் ஆகியவற்றைக் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்.
மேலும், கிடங்கில் உள்ள சரக்கு இருப்புப் பதிவேடுகளைப் பார்வையிட்ட ஆட்சியர், இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபானங்களின் அளவு, கொள்முதல் செய்யப்பட்ட விவரம் மற்றும் விற்பனைக்காக அனுப்பப்படும் விவரங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்தார்.
கிடங்கின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b