Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 மே (ஹி.ச.)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ், தவெக மற்றும் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் தரப்பு தெரிவித்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், “ஆட்சியமைக்க இடையூறு செய்யும் ஆளுநரை கண்டிக்க தவெக அஞ்சுகிறது” என்று ஆளூர் ஷா நவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சியமைக்க ஆளுநர் இடையூறு செய்கிறார். இதை கண்டிக்க தவெக அஞ்சுகிறது.
ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது விஜயிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், முன்பும் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்திருந்த ஆளூர் ஷா நவாஸ், “திமுக அரசை விமர்சிப்பார்.
ஆனால் பாஜக அரசை எதிர்க்க மாட்டார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam