பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து
சென்னை, 08 மே (ஹி.ச) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறி
TVK Vijay


Gg


சென்னை, 08 மே (ஹி.ச)

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில்,

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்த வெற்றி என்பது வெறும் மதிப்பெண்களின் சாதனை மட்டுமல்ல,உங்கள் கடின உழைப்பு, ஒழுக்கம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குக் கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

பள்ளிக் கல்வியை நிறைவு செய்து, உயர்கல்வி மற்றும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இந்த நேரத்தில், தன்னம்பிக்கையுடனும் தெளிவான இலக்குகளுடனும் முன்னேற வேண்டும்.

உங்கள் கனவுகளை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அதே நேரத்தில், இந்தத் தேர்வில் எதிர்பார்த்த முடிவுகளை பெறாத மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம்.

தோல்வி என்பது முடிவல்ல, அது வெற்றிக்கான இன்னொரு படிக்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மீண்டும் முயற்சி செய்தால் நிச்சயமாக சாதிக்க முடியும்.

மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். கல்வியிலும் வாழ்க்கையிலும் உயரங்களை எட்டி, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ