கடினமான காலங்களில் கைவிடமாட்டோம் - காங்கிரஸ் கட்சியில் மறைமுகமாக சாடிய அகிலேஷ் யாதவ்
உத்திரபிரதேசம், 08 மே (ஹி.ச.) தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ம
அகிலேஷ்


உத்திரபிரதேசம், 08 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முக்கிய அரசியல் கருத்தை பதிவு செய்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பதிவில்,

“கடினமான காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என குறிப்பிட்டுள்ள அவர், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தையும் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியை இழந்து படுதோல்வி அடைந்து இருக்கக்கூடிய சூழலில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய காட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் திடீரென வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்துள்ள நிலையில், கடினமான காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P