Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 08 மே (ஹி.ச.)
கேரளாவில் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் 63 இடங்களைக் கைப்பற்றியது.
தற்போது காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் கேரள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (CLP) கூட்டத்திற்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் முரளீதரன் கூறியதாவது,
மத்திய பார்வையாளர்கள் ஏற்கனவே டெல்லிக்கு புறப்பட்டுவிட்டனர். அவர்கள் தங்கள் அறிக்கையை கட்சி தலைமையிடம் மத்திய பார்வையாளர்கள் இன்று சமர்ப்பிப்பார்கள்.
கேரள மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து நாளை மேலிடம் முடிவெடுக்கும். பெயர் நாளை மறுநாள்(மே 10) அறிவிக்கப்படலாம். மேலிடத்தின் முடிவே இறுதியானது.
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முடிவு அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் ஒன்றிணைவார்கள்.
பெயர் வெளியானதும் அனைவரும் ஒற்றுமையாகிவிடுவார்கள். தற்போது சலசலப்பு நிலவுகிறது. நாளை முடிவு வரும். மேலிடம் தான் இறுதியானது என்றார்.
காங்கிரஸில் எந்தக் கிளர்ச்சிக்கும் வாய்ப்பில்லை
என்று முரளீதரன் உறுதிபடத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b