பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, 08 மே (ஹி.ச.) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின
DMK Leader Stalin Congratulates Students


சென்னை, 08 மே (ஹி.ச.)

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்!

95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அன்பில் மகேஷை தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!

கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b