தெலுங்கானாவில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்- போலீசார் கைது
தெலுங்கானா, 08 மே (ஹி.ச.) தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தோகுடேம் பகுதியில் மதுபாபு என்பவர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தபோது, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். போலீசார் அவரை விசாரணைக்கா
2


தெலுங்கானா, 08 மே (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தோகுடேம் பகுதியில்

மதுபாபு என்பவர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தபோது, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் ஆத்திரமடைந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த போலீசாரை நோக்கி காட்டி, அவர்களை தாக்க முயன்றார்.

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மது பாபுவை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

Hindusthan Samachar / Durai.J