காங்கிரஸுடன் சேர்ந்து அமருவது பொருத்தமல்ல - திமுக எம்.பி.க்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்க கோரி கனிமொழி கடிதம்
சென்னை, 08 மே (ஹி.ச.) மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் பொருத்தமான மாற்றங்களைச் செய்யுமாறு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி மக்களவை
Kanimozhi


Jh


சென்னை, 08 மே (ஹி.ச.)

மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் பொருத்தமான மாற்றங்களைச் செய்யுமாறு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நாட்டின் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளையும், இந்திய தேசிய காங்கிரஸுடனான திமுக கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, தற்போதைய இருக்கை அமைப்பில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் தொடர்ந்து அமர்வது பொருத்தமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் தங்களது பொறுப்புகளை திறம்பட ஆற்றும் வகையில், அவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் அலுவலகத்திடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கனிமொழி கருணாநிதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ