Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதே நோக்கத்துடன் சட்டமன்றத் தேர்தலிலும் களம் கண்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளை கட்சியானது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பையும் தேர்தல் முடிவுகளையும் பாஜக முழுமையாக மதிப்பதாக தெரிவித்துள்ள அவர், புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தமிழக பாஜக தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், ஆட்சி அமைக்கும் எந்தவொரு முயற்சியிலும் கட்சி நேரடியாக பங்கேற்காது என்றும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தக் கட்சிக்கும் பாஜக ஆதரவாக வாக்களிக்காது என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ