வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் - பிளஸ் 2 மாணவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து
சென்னை, 08 மே (ஹி.ச.) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்கால கல்வி பயணம் குறித்து தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் எக
வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்  - பிளஸ் 2 மாணவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து


சென்னை, 08 மே (ஹி.ச.)

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்கால கல்வி பயணம் குறித்து தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.

அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம்.

வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b