Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 மே (ஹி.ச.)
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஃபின் ஆலன் மற்றும் அஜிங்க்யா ரஹானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
ஆலன்–கிரீன் ஜோடி 116 ரன்கள் சேர்க்க, கொல்கத்தா அணி சீக்கிரமே ஆட்டத்தை முடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறி இருப்பதாவது,
நாங்கள் போதுமான அளவு ரன்களை எடுக்கவில்லை. அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பல தவறுகளைச் செய்தனர். நாங்கள் இரண்டு-மூன்று ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தோம். அங்கிருந்துதான் ஆட்டத்தின் போக்கு மாறியது. நாங்கள் நன்றாக ஆட்டத்தை தொடங்கினோம். ஆனால் திடீரென்று விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன.
விக்கெட்டுகள் கொத்துக்கொத்தாக விழும்போது, ஒன்று அல்லது இரண்டு ஓவர்களுக்கு அந்த அழுத்தத்தை நீங்கள் உள்வாங்கிக்கொண்டு விளையாட வேண்டும். இல்லையென்றால் அடுத்து வரும் பேட்ஸ்மேனுக்கு அது மிகவும் கடினமாகிவிடும்.
இப்போதைக்கு, நாங்கள் செய்த தவறுகளைப் பற்றி ஆராய்வோம். என்ன அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று சிந்திப்போம். அதன் அடிப்படையில், மாற்று வீரர்களாக இருக்கும் வீரர்களைக் கவனித்து, யாருக்கு வாய்ப்பளிக்கலாம், என்ன மாற்றங்களைச் செய்யலாம் என்று முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b