Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 13 ஜூன் (ஹி.ச.)
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
அதில் குறிப்பாக, ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ர தரிசன விழாவின்போது மூலவரும் உற்சவருமான நடராஜப் பெருமானே கருவறையிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்நிலையில், 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆனித் திருமஞ்சன தரிசன விழா இன்று (ஜூன் 13 ஆம் தேதி சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'சிவசிவ’ கோஷங்களை எழுப்பி சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியைத் தரிசனம் செய்து சென்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேரோட்ட நிகழ்வில் மூலவர்களான ஸ்ரீ நடராஜ மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி சுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேலதாளத்துடன், வேத மந்திரங்கள் ஓதிட தனித்தனி தேர்களில் எழுந்தருளி கீழவீதி தேரடி நிலையில் இருந்து புறப்படுவார்கள்.
தரிசன விழா 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b