Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்தல் முடிவுகள், கட்சியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள், மகளிர் அணியின் களப்பணிகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட மற்றும் மாநகர அளவிலான மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வலைதள நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam