உத்தரப்பிரதேசத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
உத்திரபிரதேசம், 13 ஜூன் (ஹி.ச.) உத்தரப்பிரதேச மாநில தொழில் வளர்ச்சிக் கழக (UPSIDC) தௌலானா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Massive fire at a chemical factory in Uttar Pradesh.


உத்திரபிரதேசம், 13 ஜூன் (ஹி.ச.)

உத்தரப்பிரதேச மாநில தொழில் வளர்ச்சிக் கழக (UPSIDC) தௌலானா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) சந்தீப் சிங் கூறுகையில்,

தேஹ்ரா கிராமத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன், SDM, CEO, தாசில்தார் மற்றும் CSO ஆகியோர் தங்கள் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியைத் தொடங்கினர்.

8 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வந்து சேர்ந்தன. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், விரிவான விசாரணை நடத்தப்படும்.

என்று கூறினார்.

இது குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி (CFO) அஜய் ஷர்மா கூறுகையில்,

புலாக்வா தீயணைப்பு நிலையத்திற்கு CTH சாலை/தௌலானா சாலையில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக புலாக்வா நிலையத்திலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

தீயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஹாப்பூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து மேலும் 3 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. காசியாபாத் மற்றும் நொய்டா நிலையங்களிலிருந்தும் கூடுதல் வாகனங்கள் கோரப்பட்டு, அனைத்து பிரிவுகளும் சம்பவ இடத்தை அடைந்துள்ளன.

தீ பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, விரைவில் முழுமையாக அணைக்கப்படும். தற்போது வரை காயம் அல்லது உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, பின்னர் காரணம் கண்டறியப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b