Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா, 13 ஜூன் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் (AFA) இன்று நடைபெற்ற 217-வது பயிற்சிப் பிரிவின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.
இந்திய விமானப்படை விமானி பயிற்சியாளர்களின் முன்-நியமனப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பதவி நியமன விழாவின் போது, புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர், பயிற்சியில் இருந்து இந்திய விமானப்படையின் செயல்பாட்டு சேவைக்கு மாறுவதில் இந்த அணிவகுப்பு ஒரு முக்கிய மைல்கல் என கூறினார்.
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு, விமானி பயிற்சியாளர்களின் பயிற்சியில் முக்கிய கட்டத்தை எட்டியதை காட்டுகிறது. இது விமானி பயிற்சியாளர்கள் நியமன அதிகாரி தகுதிக்கு உயர்வதை அடையாளப்படுத்துகிறது.
பயிற்சி முடிவு அணிவகுப்பு என்பது ஒவ்வொரு அதிகாரி பயிற்சியாளரின் விரிவான ராணுவப் பயிற்சியின் உச்சக்கட்டமாகும். அவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படும் பெருமைக்குரிய தருணமாக இந்த நிகழ்வு அமைகிறது.
Hindusthan Samachar / vidya.b