கடலோர நகர பாதுகாப்புக்கு ‘ரைஸ்-அப்’ திட்டம் - முதல்வர் சந்திப்பு நாயுடு முன்மொழிந்தார்
ஆந்திரா , 15 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சிங்கப்பூரில் ஐ.நா. மனித குடியிருப்பு திட்ட (யூஎன்-ஹாபிடாட்) நிர்வாக இயக்குநர் அனக்லாடியா ரோஸ்பாக் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் ஆந்திர மாநில ந
A


ஆந்திரா , 15 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சிங்கப்பூரில் ஐ.நா. மனித குடியிருப்பு திட்ட (யூஎன்-ஹாபிடாட்) நிர்வாக இயக்குநர் அனக்லாடியா ரோஸ்பாக் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில் ஆந்திர மாநில நகர்ப்புற வளர்ச்சி, கடலோர நகரங்களை காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பது, குடிசைப் பகுதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆந்திராவில் யூஎன்-ஹாபிடாட் சார்பில் “சென்டர் ஆஃப் எக்ஸலென்ஸ்” (சிறப்பு மையம்) அமைக்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்தார்.

இதற்காக மாநில அரசு தேவையான நிலம் ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடலோர நகரங்களை காலநிலை மாற்ற பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற “ரைஸ்-அப் (RISE-UP)” என்ற திட்டத்தை ஆந்திராவில் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல் நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் மேம்பாடு, வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுக்கான திட்டமிடல் உள்ளிட்ட பணிகளை இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்த வால்யூ கேப்ச்சர் பைனான்சிங் உள்ளிட்ட முறைகள், சர்வதேச காலநிலை நிதி பெறும் வாய்ப்புகள் பற்றியும் இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டது.

முதல்வரின் முன்மொழிவுகளுக்கு யூஎன்-ஹாபிடாட் அதிகாரிகள் சாதகமான பதில் அளித்ததுடன், ஆந்திரப் பிரதேசத்துடன் இணைந்து பணியாற்ற முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA