Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 15 ஜூன் (ஹி.ச.)
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கிடையே அமைதி புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து உலக சந்தையில் நிலவி வந்த பதற்றம் குறைந்து, முக்கியமாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த முன்னேற்றத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்தெரிவித்ததாவது,
மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வை நான் வரவேற்கிறேன்.
இந்த மோதல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பல உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்தது.
இந்த அமைதி ஒப்பந்தம் மேற்கு ஆசியாவில் நிலைத்த அமைதியை உருவாக்கவும், முக்கிய கடல் வழி வர்த்தக பாதைகள் தடையின்றி செயல்படவும் உதவும் என இந்தியா நம்புகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA