ரயில் மோதி 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பலி - ஆடு மேய்ப்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கடலூர், 15 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ஆட்டு மந்தை, மேய்ச்சலுக்காக கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் கொண்டு வரப்பட்டிருந்தது. நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, ஆடுகள் குளிரில் இருந்து தப்புவதற்காக ர
Over 70 sheep killed after being hit by a train


கடலூர், 15 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ஆட்டு மந்தை, மேய்ச்சலுக்காக கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் கொண்டு வரப்பட்டிருந்தது.

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, ஆடுகள் குளிரில் இருந்து தப்புவதற்காக ரயில் தண்டவாளத்தின் மீது படுத்திருந்தாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் எதிர்பாராதவிதமாக ஆட்டு மந்தை மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தன.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி, சற்று தொலைவில் இருந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இறந்த ஆடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள பல லட்ச ரூபாய் இழப்பிற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b