மகாராஷ்டிராவில் ஜீப் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்
புதுடெல்லி, 15 ஜூன் (ஹி.ச.) மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் ஜீப் ஒன்று கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
President Droupadi Murmu expresses condolences


புதுடெல்லி, 15 ஜூன் (ஹி.ச.)

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் ஜீப் ஒன்று கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் இன்று கூறியிருப்பதாவது,

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று மால்ஷிராஸ் தாலுகாவின் தண்டுல்வாடி கிராமத்தில் நிகழ்ந்தது.

போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி உயிரிழந்தவர்கள் இந்துபாய் தஷரத் பாவ்சே, பூஜா அமோல் சாத்தோரே, பூஜா பாலாஜி பாவ்சே, அஷ்வினி சந்தீப் பாவ்சே, சன்ஸ்கார் சந்தீப் பாவ்சே, சன்ஸ்க்ருதி சந்தீப் பாவ்சே, ஆரவ் அமோல் சாத்தோரே மற்றும் சமர்த் பாலாஜி பாவ்சே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b