பூர்ணகிரி கோயிலில் தூய்மை இயக்கம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு - உத்தராகண்ட் முதல்வர் தாமி பங்கேற்பு
உத்தராகண்ட், 15 ஜூன் (ஹி.ச.) உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கதிமாவின் நாக்லா தராய் பகுதியில் உள்ள பூர்ணகிரி கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். அதனை தொடர்ந்து அறிஞர்களுடன் நடைபெற்ற கல
sapling plantation event at Purnagiri Temple


உத்தராகண்ட், 15 ஜூன் (ஹி.ச.)

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கதிமாவின் நாக்லா தராய் பகுதியில் உள்ள பூர்ணகிரி கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

அதனை தொடர்ந்து அறிஞர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் தாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம், இலக்கியம், தொழில் மற்றும் ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,

உத்தராகண்ட் வெறும் தேவபூமி மட்டுமல்ல, அறிவு, உணர்வு மற்றும் வளமான கலாசார பாரம்பரியம் கொண்ட பூமி. சமூகத்தையும் நாட்டையும் வழிநடத்தும் முக்கிய சக்திகளில் அறிஞர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது கருத்துகள் வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.

அறிஞர்களின் ஆலோசனைகள் மாநில வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமையும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ் என்ற மந்திரத்துடன் வளர்ந்த நாடு என்ற தொலைநோக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகின்றது.

மேலும், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் உத்தராகண்ட் அரசு விரிவான வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் மாநிலத்தின் கலாசார அடையாளத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.

கல்வி, சுகாதாரம், சாலை உள்கட்டமைப்பு, குடிநீர் வழங்கல், விளையாட்டு மற்றும் விமான இணைப்பு ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக, வளர்ந்த உத்தராகண்டிற்கான வலுவான வரைபடத்தை உருவாக்க பல புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b