Enter your Email Address to subscribe to our newsletters

ஹரியானா, 16 ஜூன் (ஹி.ச.)
டிசம்பர் 11, 2014 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69-வது கூட்டத்தொடரில் ஆற்றிய உரையின்போது பிரதமர் மோடி இந்த முன்மொழிவை முதன்முதலில் முன்வைத்தார்.
2015-ல் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதிலிருந்து, ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் மூலம் இந்தியா இந்த உலகளாவிய நிகழ்வை முன்னின்று நடத்தி வருகிறது. இதற்கு மாநில அரசுகள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் ஆதரவளித்து வருகின்றன.
12-வது சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ம் தேதி இந்தியா முழுவதும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டிற்கான கொண்டாட்டங்களுக்கு நாடுகள் தயாராகி வரும் நிலையில், யோகா மற்றும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்திய வம்சாவளியினர் மற்றும் உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
அந்த வகையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஹர்விந்தர் கல்யாண் ஆகியோர் இன்று ஹரியானா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற யோகா நெறிமுறை பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், தேசிய கீதம் மற்றும் ஹரியானாவின் அதிகாரப்பூர்வ மாநில கீதம் இசைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சைனி,
2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரைக்குப் பிறகு, சர்வதேச யோகா தினத்திற்கான இந்தியாவின் முன்மொழிவை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டது. இந்த முன்மொழிவுக்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்தது.
யோகாவுக்கு கிடைத்துள்ள உலகளாவிய ஏற்பு என்பது ஒரு முன்மொழிவுக்கான ஆதரவு மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சார வலிமைக்கும் பாரம்பரியத்துக்கும் கிடைத்த அங்கீகாரமும் ஆகும்
இவ்வாறு சைனி தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b