தள்ளிக்கு வந்தனம் திட்டம் ஜூலை 3-வது வாரத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் – ஆந்திரா அமைச்சர் லோகேஷ் உத்தரவு
ஆந்திரா , 16 ஜூன் (ஹி.ச.) உண்டவல்லியில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எ
A


ஆந்திரா , 16 ஜூன் (ஹி.ச.)

உண்டவல்லியில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் திறமையை வெளிக்கொணர வரும் ஜூன் 29-ஆம் தேதி “ஷைனிங் ஸ்டார்ஸ்” நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், பெற்றோர்களை கல்வி செயல்பாடுகளில் அதிகமாக இணைக்க ஜூலை மாதத்தில் “மெகா பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு (Mega PTM)” நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் “தள்ளிக்கு வந்தனம்” திட்டத்தை வரும் ஜூலை மூன்றாவது வாரத்தில் செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் நாரா லோகேஷ் உத்தரவிட்டார்.

இதனிடையே, உயர்கல்வி தொடர்பாக EAPCET உள்ளிட்ட 12 வகையான பொதுநுழைவுத் தேர்வுகள் (CETs) தாமதமின்றி திட்டமிட்ட காலக்கெடுவில் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

தேர்வு அறிவிப்புகள் விரைவாக வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை செயல்முறைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேவைக்கேற்ப இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல், சர்வதேச தரத்திலான கல்வி நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், GMR மான்சாஸ் ஏவியேஷன் பல்கலைக்கழக அமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் நாரா லோகேஷ் உத்தரவிட்டார்.

ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய அளவிலான NCC மாநில இயக்குநரகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு அமைச்சர் நாரா லோகேஷ் நன்றி தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஜெ. ஷ்யாமலராவ், பள்ளிக் கல்வி இயக்குநர் தமீம் அன்சாரியா, உயர்கல்வி ஆணையர் நாராயண் பாரத் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA