ஆக்குவா தீவன விலையை குறைக்காவிட்டால் போராட்டம் - ஆந்திர அரசுக்கு ஜெகன் எச்சரிக்கை
அமராவதி , 16 ஜூன் (ஹி.ச.) தாடேபள்ளியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆக்குவா விவசாயிகளை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களது ஆட்சிக் காலத்தி
A


அமராவதி , 16 ஜூன் (ஹி.ச.)

தாடேபள்ளியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆக்குவா விவசாயிகளை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தங்களது ஆட்சிக் காலத்தில் ஆக்குவா விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், குறிப்பாக ஆக்குவா தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆக்குவா தீவன விலை உயர்வால் விவசாயிகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உயர்த்தப்பட்டுள்ள தீவன விலைகளை உடனடியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த மாத இறுதிக்குள் விலை குறைக்கப்படாவிட்டால் விவசாயிகள் சார்பில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரித்தார்.

ஆக்குவா விவசாயிகளின் நலனுக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து துணை நிற்கும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA