டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு
புதுடெல்லி, 16 ஜூன் (ஹி.ச) டெல்லியின் தெற்கு பகுதியில் நேப் சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்பூர் ராஜு பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக நேரு பிளேஸ் தீயணைப்பு நிலைய அதிகாரி பூல் சிங் மீன
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக  உயிர்ச்சேதம் தவிர்ப்பு


புதுடெல்லி, 16 ஜூன் (ஹி.ச)

டெல்லியின் தெற்கு பகுதியில் நேப் சராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்பூர் ராஜு பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடர்பாக நேரு பிளேஸ் தீயணைப்பு நிலைய அதிகாரி பூல் சிங் மீனா, செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது மூன்றாவது மாடியில் இருந்த வீட்டுப் பொருட்கள் எரிந்துகொண்டிருந்தன.

கட்டிடத்தில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பாக மொட்டை மாடிக்கு சென்றுவிட்டதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்திற்கு குறைந்தது நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தன.

தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டுப் பொருட்கள் சில சேதமடைந்ததைத் தவிர, உயிரிழப்பு ஏதும் இல்லை.

தீயணைப்பு குழுவினரின் உடனடி நடவடிக்கையால் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b